Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

உதயநிதியை பார்த்து பயந்த சிவகார்த்திகேயன்… என்னவா இருக்கும்?

CINEMA

உதயநிதியை பார்த்து பயந்த சிவகார்த்திகேயன்… என்னவா இருக்கும்?

நேற்று டான் டிரைலர் வெளியீட்டு விழாவில் உதயநிதியை பார்த்து பயந்த சிவகார்த்திகேயனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் “டான்” திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ். ஜே. சூர்யா ஆகியோரும் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் சிவகார்த்திகேயனும் உதயநிதி ஸ்டாலினும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் விழாவில் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரில் சிவகார்த்திகேயன் “நான் பேசாம இன்ஜினியர் ஆகிடவா?” “நான் பேசாம டான்சர் ஆகிடுவா?” “நான் பேசாம கவிஞர் ஆகிடவா?” போன்ற வசனங்கள் வரும். அப்போது டிரைலரின் இறுதியில் “நாம பேசாம அரசியலுக்கு போயிடுவோமா?” என சிவகார்த்திகேயன் ஒரு வசனம் பேசுவார். அதற்கு அருகில் உள்ள கதாப்பாத்திரம் “அதுக்கு பொய் எல்லாம் பேசனும் ப்பா” என்று கூற அதற்கு சிவகார்த்திகேயன் “அப்போ வேணாம்” என கூறுவார்.

இக்காட்சியை பார்த்த பிறகு உதயநிதியை ஒரு வித பயத்தோடு சிவகார்த்திகேயன் பார்த்தார். அதற்கு உதயநிதி பரவாயில்லை என்பது போல் சிரித்தார். உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அவர் இப்போது ஆளும் கட்சி எம். எல். ஏ. ஆக உள்ளார்.

இந்நிலையில் உதயநிதி கலந்து கொண்ட டிரைலர் வெளியீட்டு விழாவில், இவ்வாறு காட்சி வந்தவுடன் சிவகார்த்திகேயன் ஒரு வித பயத்தோடு அருகில் அமர்ந்திருந்த உதயநிதியை பார்த்தார். எனினும் உதயநிதி ஸ்டாலின் பெருந்தன்மையோடு பரவாயில்லை என்பது போல் அக்காட்சி பார்த்த பிறகு சிரித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Continue Reading

More in CINEMA

To Top