CINEMA
அஜித், விஜய்க்கு ஈகுவலாக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படம் எத்தனை தியேட்டர்களில் வெளிவருகிறது தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா, ராதாரவி, சூரி, முனீஸ்காந்த், ஷிவாங்கி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும் பள்ளி மாணவராகவும் இளமையாக காட்சித் தருகிறார். எஸ். ஜே. சூர்யா கல்லூரி முதல்வர் கதாப்பாத்திரத்தில் புதுமையான தோற்றத்தில் நடிக்கிறார். அதே போல் பள்ளி மாணவியாகவும் கல்லூரி மாணவியாகவும் பிரியங்கா மோகன் க்யூட்டாக காட்சி தருகிறார்.
வில்லனாக வரும் எஸ். ஜே. சூர்யா மெர்சல், மாநாடு ஆகிய திரைப்படங்கள் போலவே இத்திரைப்படத்திலும் மாஸ் வில்லனாக காட்சி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைலரை பார்க்கும்போது ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடக்கும் போரட்டமே கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து “டான்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஜலபுலஜங்க்” பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கலர் ஃபுல்லாகவும் வெறித்தனமாகவும் நடனமாடுகிறார். கல்லூரி விழா ஒன்றில் இப்பாடல் இடம்பெறுவது போல் பிரம்மாண்ட செட்டுகள் போடப்பட்டுள்ளது. செல்பிரேஷன் மோடில் கல்லூரி மாணவர்கள் ஆடும் ஒரு ஜாலியான கலகலப்பான பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “டான்” திரைப்படம் 500 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித், விஜய் படங்களுக்கு சமமாக சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளிவருகிறது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து கோலிவுட் வட்டாரங்களே “ஓ” போடுகிறது. தயாரிப்பாளர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். ஏற்கனவே அவர் தயாரிப்பாளர்களின் செல்ல பிள்ளை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் “டான்” திரைப்படம் அஜித் விஜய் படங்களுக்கு சமமாக வெளிவருவது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
