CINEMA
விஜய்யை சந்தித்த சிறுத்தை சிவா? பீதியில் ரசிகர்கள்
நடிகர் விஜய்யை இயக்குனர் சிறுத்தை சிவா சந்தித்துள்ளதாக பரவிய செய்தியால் விஜய் ரசிகர்கள் பீதியில் உள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்” திரைப்படம் போட்ட காசை விடவும் அதிகமான கலெக்சனை அள்ளினாலும் திரைப்படம் விஜய் ரசிகர்களை சுத்தமாக ஈர்க்கவில்லை. எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் கம்மென்ட்டுகளே வந்து கொண்டிருந்தன.
அது மட்டுமல்லாது திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில் விஜய் நடனமாடியது எல்லாம் கேலி செய்யப்பட்டு மீம்களாக வெளிவந்தன. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.
இவ்வாறு பல நெகட்டிவ் எனர்ஜிக்கள் விஜய் ரசிகர்களை தாக்கி வந்த நிலையில் நேற்று பரவிய ஒரு திடுக்கிடும் செய்தியால் விஜய் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். அதாவது நடிகர் விஜய்யை இயக்குனர் சிறுத்தை சிவா சந்தித்துள்ளதாகவும் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் எனவும் செய்திகள் இணையத்தில் பரவின.
இச்செய்தியை கேட்ட விஜய் ரசிகர்கள் ஸ்தம்பித்து போயினர். சிவா இயக்கத்தில் அஜித் நிறைய திரைப்படங்களை நடித்து வந்த நிலையில் “சிவாவிடம் அஜித் சிக்கிவிட்டார்” என நெட்டிசன்கள் கேலி செய்து வந்தனர். மேலும் அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைவதாகவும் செய்திகள் பரவின.
இந்நிலையில் நேற்று சிறுத்தை சிவா விஜய்யின் அலுவலகத்திற்கு சென்று விஜய்யை சந்தித்தாக செய்திகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து விஜய் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினர். ஆனால் மறுபக்கம் அஜித் ரசிகர்கள் பல மீம்களை போட்டுத் தள்ளி குஷியாக இருந்தனர்.
எனினும் சிவா விஜய்யை வைத்து இயக்கிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.