Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“பத்து தல” சிம்பு வரார் வழிவிடு…

CINEMA

“பத்து தல” சிம்பு வரார் வழிவிடு…

சிலம்பரசன் டி. ஆர். நடிக்கும் “பத்து தல” திரைப்படம் குறித்தான புது அப்டேட் வெளிவந்துள்ளது.

லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி யங் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்பு தமிழ் திரையுலகில் மன்மதனாக திகழ்ந்தவர். நயன்தாரா, ஹன்சிகா, ஐஸ்வர்யா என பல காதலிகளுடன் தன் வாழ்வை கழித்த சிம்பு சில வருடங்களுக்கு முன் காதல் பிரச்சினையால் நடிப்பில் கோட்டை விட்டார். பல விமர்சனங்கள் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது பாய மீண்டும் “Atman’ ஆக எழுந்து வந்தார்.

அவர் நடித்த “மாநாடு” திரைப்படம் சிம்புவின் கம் பேக்கை உறுதி செய்தது. மேலும் தன்னுடைய உடல் பருமனை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடம்பை இரும்பாக்கி பழைய ஃபார்மில் என்ட்ரி கொடுத்து இளம் பெண்களின் மனதை திணறடித்தார்.

கௌதம் மேனன் இயக்கி வந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் சிம்பு நடித்து வந்தார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதனிடையே “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் இடம்பெற்ற “மறக்குமா நெஞ்சம்”, “காலத்துக்கும் நீ வேணும்” ஆகிய பாடல்கள் வெளிவந்தன. இந்த இரண்டு பாடல்களும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திழுத்தது.

இந்நிலையில் கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” என்ற திரைப்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளிவந்தது. இதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்தான முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதாவது வருகிற டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி “பத்து தல” திரைப்படம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கும் ஏ. ஆர். ரகுமான் தான் இசையமைக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top