CINEMA
அப்பாவாக மாறிய சிம்பு… இணையத்தில் லீக் ஆன பத்து தல ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ
சிம்பு நடித்து வரும் “பத்து தல” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி யங் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்பு தமிழ் திரையுலகில் மன்மதனாக திகழ்ந்தவர். நயன்தாரா, ஹன்சிகா, ஐஸ்வர்யா என பல காதலிகளுடன் தன் வாழ்வை கழித்த சிம்பு சில வருடங்களுக்கு முன் காதல் பிரச்சினையால் நடிப்பில் கோட்டை விட்டார். பல விமர்சனங்கள் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது பாய மீண்டும் “Atman’ ஆக எழுந்து வந்தார்.
அவர் நடித்த “மாநாடு” திரைப்படம் சிம்புவின் கம் பேக்கை உறுதி செய்தது. மேலும் தன்னுடைய உடல் பருமனை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடம்பை இரும்பாக்கி பழைய ஃபார்மில் என்ட்ரி கொடுத்து இளம் பெண்களின் மனதை திணறடித்தார்.
கௌதம் மேனன் இயக்கிய “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் “பத்து தல” என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். வருகிற டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி “பத்து தல” திரைப்படம் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கும் ஏ. ஆர். ரகுமான் தான் இசையமைக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது “பத்து தல” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சிம்பு வயதான தோற்றத்தில் தென்படுகிறார். அவருக்கு பின் அனு சித்தாரா நிற்கிறார். அவரது மடியில் ஒரு சிறுமி இருக்கிறார். இதில் இருந்து இத்திரைப்படத்தில் சிம்பு ஒரு Family Man ஆக நடிக்கிறார் என தெரியவருகிறது. அந்த வீடியோ இதோ…
A.G.R From the sets of #PathuThala#SilambarasanTR pic.twitter.com/uHEJSzaB1t
— Tamizhan STR 360 (@TamizhanSTR360) August 21, 2022