CINEMA
“சூரரைப் போற்று” இயக்குனருடன் இணைய உள்ள சிம்பு.. மாஸ் தகவல்
“சூரரைப் போற்று” திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக ஒரு மாஸ் தகவல் வெளிவந்துள்ளது.
“சூரரைப் போற்று” திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 2D என்டெர்ட்யின்மென்ட் சார்பாக சூர்யா-ஜோதிகா ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்தனர்.
“சூரரைப் போற்று” திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட், ஊர்வசி ஆகிய பலரும் நடித்திருந்தனர். ஜி வி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. குறிப்பாக “கையிலே ஆகாசம்”, “காட்டுப் பயலே” போன்ற பாடல்கள் பரவலாக அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் “சூரரைப் போற்று” திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைக்கதைக்கான விருதை சுதா கொங்கரா பெறுகிறார்.
இந்நிலையில் சுதா கொங்கரா “சூரரைப் போற்று” ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இதில் அக்சய் குமார் நடித்து வருகிறார். மேலும் சூர்யா இத்திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் வருகிறார்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து “கே ஜி எஃப்” திரைப்படத்தை தயாரித்த ஹோம்பேல் நிறுவனத்தின் தயாரிப்பில் சுதா கொங்கரா ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தில் சிம்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகிறது. மேலும் சிம்பு தற்போது “பத்து தல” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.