CINEMA
“சீரியல் நடிகையுடன் நெருங்கி பழகும் சிம்பு”.. காதலா? நட்பா?
நடிகர் சிம்பு பிரபல சீரியல் நடிகை ஒருவருடன் தற்போது நெருங்கி பழகி வருகிறார். அவர் யார் தெரியுமா?
லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமாகி யங் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்பு தமிழ் திரையுலகில் மன்மதனாக திகழ்ந்தவர். நயன்தாரா, ஹன்சிகா, ஐஸ்வர்யா என பல காதலிகளுடன் தன் வாழ்வை கழித்த சிம்பு சில வருடங்களுக்கு முன் காதல் பிரச்சினையால் நடிப்பில் கோட்டை விட்டார். பல விமர்சனங்கள் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது பாய மீண்டும் “Atman’ ஆக எழுந்து வந்தார்.
அவர் நடித்த “மாநாடு” திரைப்படம் சிம்புவின் கம் பேக்கை உறுதி செய்தது. மேலும் தன்னுடைய உடல் பருமனை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உடம்பை இரும்பாக்கி பழைய ஃபார்மில் என்ட்ரி கொடுத்து இளம் பெண்களின் மனதை திணறடித்தார்.
இந்நிலையில் சமீப காலமாக சிம்பு ஒரு பிரபல சீரியல் நடிகையுடன் நெருங்கி பழகி வருகிறார். அவர் யாரென்றால் “யாரடி நீ மோகினி” என்ற சின்னத்திரை தொடரின் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த ஸ்ரீநிதி தான் அவர். சமீப காலமாக இருவரும் வீடியோ காலில் எல்லாம் பேசி வருகிறார்கள். ஸ்ரீநிதி சிம்புவுடன் பேசிய வீடியோ கால் ரெக்கார்டிங்க் ஒன்றை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் சிம்புவுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவேற்றி வருகிறார்.
இதனை பார்த்து கொண்டு வரும் ரசிகர்களிடம் “ஒஹோ, சிம்பு மறுபடியும் கமிட் ஆயிட்டார் போலயே, ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்க” என பல பேச்சுகள் எடுபட்டன.
இதனை தொடர்ந்து சமீபத்தில் ஸ்ரீநிதி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவேற்றியிருந்தார். அதில் சிம்பு கண்கலங்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் “உலகில் எல்லாருக்கும் திருமணம் நடந்துவிடும், எனக்கும் சிம்புவிற்கு தவிர” என குறிப்பிட்டிருந்தார்.
அதில் ஒருவர் சிம்புவையும் ஸ்ரீநிதியையும் குறிப்பிட்டு “நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்யக்கூடாது?” என கமெண்ட் செய்திருந்தார். ரசிகர்களும் இதற்கு ஸ்ரீநிதி என்ன பதில் அளிப்பார் என காத்துக் கொண்டிருந்தனர். அதற்கு அவர் “நல்லா தான் இருக்கும், ஆனா எனக்கு தான் ஆள் இருக்கே” என ரிப்ளை செய்தார்.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் சிம்பு மீண்டும் ஒரு காதல் அத்தியாயம் எழுத போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஸ்ரீநிதி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார். சிலர் “ஸ்ரீநிதி ஒரு தீவிர சிம்பு ரசிகை, ஆதலால் அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பழகி வருகிறார், அவ்வளவுதான்” என ஃபுல் ஸ்டாப் வைக்கப் பார்க்கிறார்கள். எனினும் சிம்புவும் ஸ்ரீநிதியும் நெருங்கி பழகுவது ரசிகர்களின் கண்களை உறுத்தி கொண்டு தான் இருக்கிறது.
View this post on Instagram