CINEMA
கியாரா அத்வானியுடனான காதலை உறுதிபடுத்திய பாலிவுட் நடிகர்.. அடடா!!
கியாரா அத்வானியுடனான தன்னுடைய காதலை கிட்டதட்ட உறுதிபடுத்தியுள்ளார் அந்த பிரபல நடிகர்.
கியாரா அத்வானி பாலிவுட் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர். இவர் “எம் எஸ் தோனி”, “கபீர் சிங்”, “குட் நியூஸ்” என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் “RC 15” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடித்த “செர்ஷா” என்ற திரைப்படம் வெளிவந்தது. அதனை தொடர்ந்து சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் டேட்டிங் செய்து வருகிறார்கள் எனவும் இருவரும் காதலிக்கிறார்கள் எனவும் பாலிவுட் வட்டாரங்களில் பல செய்திகள் பரவி வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் “காஃபி வித் கரண்” சீசன் 7 நிகழ்ச்சியில் சித்தார்த் மல்ஹோத்ரா பங்குகொண்டார். அப்போது கரண் ஜோகர் கியாரா அத்வானி பங்குபெற்ற இதுவரை வெளிவராத எபிசோட்டின் ஒரு காட்சியை அங்கே ஒளிபரப்பச் செய்தார். அதில் கியாரா அத்வானி “சித்தார்த் நெருங்கிய நண்பன் என்ற நிலையையும் தாண்டிய ஒரு நெருக்கமான உறவு எனக்கு. ஆனால் திருமணம் குறித்து நான் எதுவும் தற்போது கூறமுடியாது” என கூறியிருந்தார்.
அந்த வீடியோவை பார்த்த சித்தார்த் மல்ஹோத்ராவிடம் கியாரா அத்வானியுடனான உறவை குறித்து கேட்டார் கரண் ஜோகர். மேலும் கரண் ஜோகர் அவர்கள் இருவரின் திருமணத்திற்கு என்னென்ன செய்யலாம் என்பது குறித்தும் பேசினார். அப்போது இடைமறித்த சித்தார்த் மல்ஹோத்ரா “நீங்கள் திருமணத்திற்கு தயாராகி விட்டீர்கள். எங்களையும் தயாராக விடுங்கள்” என கூறினார். இதனை கொண்டு இருவரும் காதலித்து வருவதும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதும் உறுதியாகியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.