CINEMA
ஆஸ்கருக்கு செலக்ட் ஆன சாய் பல்லவி திரைப்படம்.. வேற லெவல்..
சாய் பல்லவி நடித்த சியாம் சிங்கா ராய் திரைப்படம் 3 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சாய் பல்லவி, நானி, கிரீத்தி ஷெட்டி, மடோனா செபஸ்டியன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2021 ஆம் டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “சியாம் சிங்கா ராய்”.
வாசுதேவ் என்கிற சினிமா இயக்குனர் ஒரு தரமான சினிமா எடுக்க முயல்கிறார். அப்போது அவரது முந்தைய ஜென்மம் அவருக்கு ஞாபகம் வருகிறது.
அதாவது தனது முற்பிறவியில் சியாம் சிங்கா ராய் என்ற எழுத்தாளராக 70களில் வாழ்ந்தபோது அவர் மைத்ரேயி என்ற பெண்ணை காதலித்தது ஞாபகத்திற்கு வருகிறது. இவ்வாறு முற்பிறவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “சியாம் சிங்கா ராய்” திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் சில Bold ஆன காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் இத்திரைப்படத்திற்கு சர்ச்சையும் கிளம்பியது. இந்த நிலையில் இத்திரைப்படம் 3 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி 95 ஆவது ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் “சியாம் சிங்கா ராய்” திரைப்படம் சிறந்த பிரியாடிக் திரைப்படம், சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த கலாச்சார நடனம் போன்ற பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
“சியாம் சிங்கா ராய்” திரைப்படத்தை ராகுல் சாங்கிருத்யாயன் இயக்கியுள்ளார். நிஹாரிகா என்டெர்டெயின்மென்ட் சார்பாக வெங்கட் போயனப்பள்ளி இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். மைக்கி ஜே மேயர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.