CINEMA
சிவாங்கியிடம் தமிழில் அசத்திய ரன்பீர் கபூர்.. வைரல் வீடியோ
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் சிவாங்கியிடம் தமிழில் அசத்தலாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரன்பீர் கபூர் நடிப்பில் வருகிற 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ள திரைப்படம் “சம்ஷேரா”. இத்திரைப்படம் ஹிந்தி மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளிவருகிறது.
இத்திரைப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தற்போது தீயாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பாகமாக தமிழில் இத்திரைப்படத்தின் புரோமோஷன் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ரன்பீர் கபூர், “குக் வித் கோமாளி” சிவாங்கியுடன் தோன்றுகிறார்.
அதில் சிவாங்கி ஒரு ஹிந்தி வார்த்தையை தவறாக படிக்க, சிவாங்கிக்கு அந்த வார்த்தையை சரியாக சொல்லித் தருகிறார் ரன்பீர் கபூர்.
அதன் பின் சிவாங்கி தமிழ் நடிகர்களின் டயலாக்குகளை கூறுமாறு ரன்பீர் கபூரை சேல்லஞ்ச் செய்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களின் பட வசனங்களை ரன்பீர் கபூர் பிச்சி உதறுகிறார். இதனை பார்த்த சிவாங்கி ஷாக் ஆகிறார். இவ்வாறு அந்த புரோமோ வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை சிவாங்கி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புரோமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் எங்கும் செல்லப் பிள்ளையாக அறியப்பட்டவர் சிவாங்கி. இவர் தற்போது “குக் வித் கோமாளி” மூன்றாவது சீசனில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
மேலும் பல திரைப்பட பாடல்கள், தனி ஆல்பம் பாடல்கள் பலவற்றை பாடியுள்ளார். சமீபத்தில் கூட “டான்” திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் “காசேதான் கடவுளடா”, வடிவேல் நடிப்பில் வெளிவர இருக்கும் “நாய் சேகர்” போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
