CINEMA
தொகுப்பாளினி DD-ஐ கோடாரியால் வெட்டப் போன ரன்பீர் கபூர்.. வைரல் வீடியோ
தொகுப்பாளினி டிடியை ரன்பீர் கபூர் கோடாரியால் வெட்டப் போன வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரன்பீர் கபூர் நடிப்பில் வருகிற ஜூலை 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ள திரைப்படம் “சம்ஷேரா”. இத்திரைப்படம் ஹிந்தி மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளிவருகிறது.
இத்திரைப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தற்போது தீயாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பாகமாக தமிழில் இத்திரைப்படத்தின் புரோமோஷன் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ரன்பீர் கபூர், தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியுடன் தோன்றுகிறார்.
அதில் திவ்ய தர்ஷினி குஷியாக ஹீரோயின் போல் உடையணிந்து ரன்பீர் கபூருடன் நடனமாட வருகிறார். ரன்பீர் கபூர் ஆக்சன் செய்யலாம் என கூறுகிறார். அதற்கு டிடி “முதலில் ரொமான்ஸ், அதன் பின் ஆக்சன்” என கூறுகிறார்.
பின்னணியில் “சம்ஷேரா” திரைப்படத்தின் பாடல் ஒலிக்கிறது. இருவரும் நடனமாடுகிறார்கள். அதன் பின் டிடி அங்கிருந்து கிளம்புகிறார். அப்போது டிடியை பிடித்து இழுத்த ரன்பீர் ஆக்சன் செய்யலாம் என கூறுகிறார். அதற்கு டிடி உடம்பில் பல பிரச்சனைகள் இருப்பதாக கூறுகிறார். அதன் பின் ரன்பீர் “எதுவுமே பண்ணமாட்டிக்கீங்களே, இது என்ன புரோமோஷன்?” என கடுப்பாகிறார்.
உடனே டிடி “சம்ஷேரா” திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை எடுத்து வந்து திரைப்படம் குறித்து பேசுகிறார். இதனை பார்த்து மேலும் கடுப்பான ரன்பீர் கையில் கோடாரியுடன் டிடியை வெட்ட விரட்டுகிறார். இவ்வாறு இந்த புரோமோஷன் வீடியோ அமைந்துள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவை டிடி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த கலகலப்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
