CINEMA
“சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி” சும்மா பட்டைய கிளப்புராறே..
சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள் நடிப்பில் வெளிவரவிருக்கும் “லெஜண்ட்” திரைப்படத்தின் முக்கியமான புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருள், சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் பல பல கெட் அப்களில் தோன்றி பட்டையை கிளப்பி வந்தார். அதனை தொடர்ந்து ஒரு நாள் சரவணன் அருள் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று வந்த தகவல் திரையுலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
மேலும் அத்திரைப்படத்தை பிரபல இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர் என்றதும் பெரிய ஆச்சரியமாக இருந்தது. மேலும் ஆச்சரியம் நிற்காமல் தொடர்ந்தது. அதாவது அத்திரைப்படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அது மட்டும் அல்லாமல் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ஆர். வேல்ராஜ் என்பதும் படத்தொகுப்பு ரூபன் என்பதும் பார்வையாளர்களை “ஓ” போட வைத்தது. இதனை தொடர்ந்து அத்திரைப்படத்திற்கு “லெஜண்ட்” என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவலும் வந்தது.
மேலும் “லெஜண்ட்” திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளிவந்து மாஸ் காட்டியது. லெஜண்ட் சரவணன் மாஸ் ஹீரோவை போல் ஸ்டைலாக தோற்றம் அளித்து நம்மை அசரவைத்தார்.
இதனை தொடர்ந்து லெஜண்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் “மொசலோ மொசலு’ பாடல் வெளிவந்து பட்டைய கிளப்பியது. பாடலில் இளம்பெண்கள் ஸ்டைலாக ஆடைகள் அணிந்து பெண்களை சுற்றி சுற்றி வரும் ரோமியோவாக காட்சி தந்தார். அது மட்டுமல்லாமல் அப்பாடலில் அவரது நடனமும் லைக்ஸ்களை அள்ள வைத்தது. அப்பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் பிரபல நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில் தற்போது “லெஜண்ட்” திரைப்படத்தை குறித்து மற்றொரு அப்டேட் வந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “வாடி வாசல்” பாடல் வருகிற மே 20 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இப்பாடலை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெளிவந்த “மொசலோ மொசலு” பாடல் வேற லெவல் ஹிட் ஆன நிலையில் இப்பாடலும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
