CINEMA
“வாரிசு” குடும்ப படம் ன்னு யார் சொன்னா?”.. கொதித்தெழுந்த சரத்குமார்..?
“வாரிசு” திரைப்படம் குடும்ப திரைப்படம் என்று தகவல் வெளிவந்த நிலையில் தற்போது இதனை மறுத்துள்ளார் நடிகர் சரத்குமார்.
விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படக்குழுவினர் பலரும் மிகவும் வெறித்தனமாக உழைத்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். எஸ் தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷ்யாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் ஒரு ரோலில் நடிக்கிறார் என பேச்சுக்கள் எழுந்து வருகின்றது.
“வாரிசு” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சுவாரசியமான குடும்ப திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வந்தது. இந்நிலையில் சரத்குமார் இதனை மறுத்துள்ளார்.
சமீபத்தில் சரத்குமார் ஒரு பிரபல யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் நிரூபர் “தொடர்ந்து விஜய் ஆக்சன் திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தார். தற்போது வாரிசு குடும்ப திரைப்படம் என்னும் போது அதற்கான எதிர்பார்ப்புகள் வித்தியாசமாக இருக்குமே” என கூறினார்.
அதனை இடைமறித்த சரத்குமார் “வாரிசு குடும்ப திரைப்படம் என்று உங்களிடம் யார் சொன்னது?” என கேட்டார். மேலும் பேசிய அவர் “வாரிசு திரைப்படத்தில் ஆக்சன், ட்ராமா, சண்டைக்காட்சிகள், என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறையவே இருக்கும்” என கூறினார்.
“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
