CINEMA
சரத்குமாருக்கு இத்தனை படங்கள் வரிசையில் இருக்கிறதா? தொடர்ந்து வெளியாகும் போஸ்டர்கள்..
நடிகர் சரத்குமாருக்கு வரிசையாக நிறைய படங்கள் வெளிவருகிறது. இன்று சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பல போஸ்டர்கள் வெளிவந்துள்ளது.
நடிகர் சரத்குமார் தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர். இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. தமிழில் பல முக்கிய வெற்றித் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் திரைப்படங்களில் “நாட்டாமை”, “சேரன் பாண்டியன்” “சூர்ய வம்சம்” “மூவேந்தர்” ஆகிய திரைப்படங்கள் இப்போதும் பேசப்படுபவை. இவர் பல திரைப்படங்களில் வெறித்தனமான வில்லனாக நடித்திருக்கிறார். இவர் ஒரு சிறந்த பாடி பில்டரும் கூட.
சரத்குமார் தொடக்க காலத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர். இவர் சொந்தமாக மீடியோ வாய்ஸ் என்ற வார இதழை நடத்தினார். மேலும் இவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். ஒரு முறை ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவ்வாறு பல துறைகளில் கோலோச்சிய சரத்குமாருக்கு இன்று பிறந்த நாள். இப்பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் “நிறங்கள் மூன்று” திரைப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளிவந்துள்ளது. இதில் கையில் துப்பாக்கியுடன் சரத்குமார் மாஸாக தென்படுகிறார்.
அதனை தொடர்ந்து சரத்குமார் நடிக்கும் “ஆழி” திரைப்படத்தின் போஸ்டர் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தை மாதவ் ராமதாசன் இயக்குகிறார். இத்திரைப்படம் கடலும் கடல் சார்ந்த கதையம்சத்துடன் உருவாகும் திரைப்படமாக தெரிய வருகிறது.
மேலும் சரத்குமார் நடிக்கும் “தி ஸ்மைல் மேன்” போஸ்டர் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் சரத்குமாரின் 150 ஆவது திரைப்படம் ஆகும். இதனை ஷ்யாம் பிரவீன் இயக்கிகுறார். சரத்குமார் இந்த போஸ்டரில் டெரர் லுக்கில் தென்படுகிறார்.
