CINEMA
“குலு குலு” சந்தானத்தின் குலு குலு டிரைலர்..
சந்தானம் வித்தியாசமான நடித்த “குலு குலு” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
நகைச்சுவை நடிகர் சந்தானம் தற்போது பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிக்கிலோனா”, “சபாபதி” ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது “குலு குலு” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் “மேயாத மான்”, “ஆடை” போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். மேலும் “மாஸ்டர்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதி உள்ளார்.
தற்போது “குலு குலு” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளிவந்துள்ளது. டிரைலரை பார்க்கும் போது இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக அமைந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் சந்தானம் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்களை விட இத்திரைப்படத்தில் புதுமையாக தென்படுகிறார்.
திரைப்படம் பிளாக் காமெடி வகையராவை சேர்ந்ததாக தெரிகிறது. ஒரு கடத்தலை கண்டுபிடிக்க ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருக்கும் சந்தானத்திடம் உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு சந்தானம் உதவுகிறார் என்பது தான் கதை என தெரிய வருகிறது. டிரைலரை பார்க்கும் போது சந்தானம் புதுவகையான கதையை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது.
“குலு குலு” திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் சந்தானத்துடன் அதுல்யா, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், லொள்ளு சபா மாறன் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். இத்திரைப்படம் வருகிற 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.
