CINEMA
சமந்தா தவற விட்ட அரிய வாய்ப்பு..? என்ன தெரியுமா?
சமந்தா சமீபத்தில் அவருக்கு வந்த ஒரு அரிய வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார். அது என்ன தெரியுமா?
தென் இந்தியாவின் Most Wanted கதாநாயகியாக திகழும் சமந்தா தற்போது சகுந்தலா, குஷி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த “புஷ்பா” திரைப்படத்தில் “ஊ சொல்றியா” பாடலில் ஐட்டம் டேன்ஸ் ஆடியது இந்தியாவையே கலக்கியது. “புஷ்பா” திரைப்படம் பாலிவுட்டில் சக்கை போடு போட்டது.
இந்நிலையில் அட்லி ஷாருக்கானை வைத்து “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் நயன்தாரா, சானியா மல்கோத்ரா, சுனில் கிரோவர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். நயன்தாராவிற்கு இது முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இத்திரைப்படத்தில் முதலில் நயன்தாராவிற்கு பதில் சமந்தாவுக்கு தான் வாய்ப்பு சென்றதாம். ஆனால் சில காரணங்களால் சமந்தா தவிர்த்திருக்கிறார். அதன் பின்னர் தான் நயன்தாராவிற்கு இந்த வாய்ப்பு சென்றதாம். இதனால் ஒரு பெரிய வாய்ப்பை சமந்தா தவறவிட்டிருக்கிறார் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றது.
நயன்தாரா “ஜவான்” திரைப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஷாருக் கான் இதில் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
நடிகை பிரியாமணி “ஜவான்” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
“ஜவான்” திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் அதில் ஷாருக் கான் முகத்தில் படுகாயங்களுடன் தென்படுகிறார். பல துப்பாக்கிகளில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து கொண்டும், ஒரு கத்தியை எடுத்துக் கொண்டும் போருக்கு போவது போல் ரெடி ஆகிறார். அதன் பின் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் ஷாருக் கான் அமர்ந்திருக்கிறார். அவர் முன் ஒரு டிரைன் செல்கிறது. இவ்வாறு அந்த வீடியோ நிறைவடைகிறது.