CINEMA
“கொஞ்சமாவது வளருங்க”… பளார் பதிலால் பதிலடி கொடுத்த சமந்தா..
தனது முன்னாள் கணவர் குறித்தான வதந்தி குறித்த குற்றச் சாட்டிற்கு பளார் பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா.
சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இதனை தொடர்ந்து நாக சைதன்யா பிரபல பாலிவுட் நடிகை சோபிதா துலிபலாவுடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் சேர்ந்து பல நாட்களாக Dating செய்து வருகிறார்கள் எனவும் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் எனவும் செய்திகள் பரவின.
இந்த செய்திகள் எல்லாம் நாக சைதன்யாவின் ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கின என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நாக சைதன்யா, சோபிதா இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்ற வதந்தியை வேண்டும் என்றே பரப்புவது சமந்தாவும் அவரது PR team-ம் தான் என நாக சைதன்யா ரசிகர்கள் சமந்தா மீது குற்றச் சாட்டை வைத்தனர்.
இந்நிலையில் இது குறித்த செய்தி ஒன்றை பகிர்ந்து இந்த விவாகரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் அதிரடியான டிவிட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் “ஒரு பெண்ணை பற்றி வதந்திகள் வந்தால் அதை உண்மை என நம்புகிறீர்கள். ஆனால் ஒரு ஆணை பற்றி வதந்தி வந்தால் அதை ஒரு பெண் தான் பரப்பி விடுகிறார் என குற்றம் சாட்டுகிறீர்கள். தயவு செய்து கொஞ்சமாவது வளருங்கள். உங்கள் பணியில் ஆர்வம் செலுத்துங்கள். உங்கள் குடும்பங்களை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் “ என பதிலடி தந்துள்ளார்.
Rumours on girl – Must be true !!
Rumours on boy – Planted by girl !!
Grow up guys ..
Parties involved have clearly moved on .. you should move on too !! Concentrate on your work … on your families .. move on!! https://t.co/6dbj3S5TJ6— Samantha (@Samanthaprabhu2) June 21, 2022
இந்த பதிலடி டிவிட் தற்போது வேற லெவலில் டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும் சமந்தா ரசிகர்கள் “தரமான பதிலடி”, “கெத்தான பதில்” என பாராட்டி வருகின்றனர்.