CINEMA
“சமந்தா மோடி சப்போர்ட்டரா?”… இதையே இப்போதான் கண்டுபிடிக்கிறீங்களா??
சமந்தா மோடி குறித்து பாராட்டி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் திடீரென வைரல் ஆகி வருகிறது.
தென்னிந்தியாவின் டாப் நடிகையாக திகழும் சமந்தா, தற்போது பேன் இந்தியா நடிகையாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் “யசோதா”, “சகுந்தலா” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன. மேலும் “குஷி” என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் “தளபதி 67” திரைப்படத்தில் சமந்தா வில்லியாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வருகின்றன. இவ்வாறு எப்போதும் பிசியாக இருந்து வருகிறார் சமந்தா.
இந்த நிலையில் சமந்தா பல வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் சமந்தா “நான் எப்போதும் மோடியின் மிகப்பெரிய ஆதரவாளர். அவர் தற்போது செய்து வரும் பல விஷயங்களால் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் இன்னும் ஒரு பழைய வீடியோ ஒன்று அதில் இணைக்கப்பட்டிருக்கிறது. அது 2014 ஆவது ஆண்டு வாக்கில் வெளியான வீடியோ என அறியப்படுகிறது. அதில் சமந்தா “நான் ஒரு மோடி சப்போர்ட்டர். அவரால் மாற்றம் வரும் என எண்ணுக்கிறேன்” என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் திடீரென வைரல் ஆகி வருகிறது.
சமந்தா பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என தகவல்கள் வருகின்றன. அத்திரைப்படத்தை தினேஷ் விஜன் இயக்க உள்ளார். மேலும் சமந்தாவுடன் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிக்க உள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
“புஷ்பா” திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய கிளாமர் நடனத்தின் மூலம் இந்தியாவே சமந்தாவை அறிந்து கொண்டது. ஏற்கனவே தென் இந்திய சினிமா மார்க்கெட்டை கைப்பற்றிய சமந்தா தற்போது பாலிவுட்டிலும் தன் கொடியை ஏற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
