CINEMA
“கர்ப்பமான சமந்தா”.. வைரல் புகைப்படத்தின் உண்மை தன்மை என்ன?
சமந்தா கர்ப்பமானதாக வைரல் ஆகும் புகைப்படத்தின் உண்மை தன்மை என்ன என்று பார்க்கலாம்
சமந்தா தற்போது தென் இந்தியாவின் டாப் மோஸ்ட் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபத்தில் வெளிவந்த “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தை தொடர்ந்து சகுந்தலா, குஷி என பல திரைப்படங்கள் அவர் நடிப்பில் வெளிவர தயாராக இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் சமந்தா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நாக சைதன்யாவிடம் இருந்து பிரிந்தபின் சமந்தா கர்ப்பமாகி உள்ளார்? என இணையத்தில் பலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
மேலும் இப்புகைப்படம் அவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் “யசோதா” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்டது எனவும் புரளிகள் கிளம்பி வருகிறது.
இந்நிலையில் இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மை வெளிவந்துள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சி என தெரிய வந்துள்ளது.
அக்காட்சியில் சமந்தா வயிற்றுக்குள் உருண்டை வடிவத்தால் ஆன ஒன்றை வைத்துக் கொண்டு சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டுவார். இவ்வாறு அமைந்த காட்சியின் Screenshot ஒன்று சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியுடன் பரவி வருகிறது.
சமீபத்தில் கூட சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் நாய் மற்றும் பூனைகளுடன் தான் பகிர்ந்து வந்த புகைப்படங்களை பார்த்து ஒருவர் ““சமந்தா நாய் மற்றும் பூனைகளுடன் தான் ஓர் நாள் தனியாக சாகப்போகிறார்” என டிவீட் செய்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா ““அப்படி இறந்தால் நான் ஒரு அதிர்ஷடசாலி” என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது சமந்தா கர்ப்பம் ஆகியுள்ளார் என வதந்தி பரவி வருகிறது.