CINEMA
முன்னாள் கணவரின் வீட்டை லம்ப் அமவுண்ட்டுக்கு வாங்கிய சமந்தா?? ஏன் தெரியுமா?
தனது முன்னாள் கணவருடன் வாழ்ந்த அந்த வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார் சமந்தா. ஏன் தெரியுமா?
சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்து வந்த அப்பார்ட்மெண்ட் வீட்டை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளாராம் சமந்தா.
அதாவது நாக சைதன்யாவும் சமந்தாவும் திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த அப்பார்ட்மென்ட் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள். அதன் பிறகு சமந்தாவும் நாக சைதன்யாவும் புது வீட்டை வாங்கியுள்ளார்கள்.
காலப் போக்கில் இருவரும் பிரிந்த வேளையில் அந்த அப்பார்ட்மென்ட் வீடு இன்னொருவர் கையில் சென்று விட்டதாம். இந்த நிலையில் தான் தற்போது அந்த வீட்டை அடம்பிடித்து அதிக விலைக்கு வாங்கியுள்ளார் சமந்தா என செய்திகள் தெரிவிக்கின்றன.
எதற்காக அந்த வீட்டை சமந்தா அடம்பிடித்து வாங்கியுள்ளார் என்பது குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்து வந்த பிறகு சமந்தா வேறு வீட்டை வாங்குவதற்கு பார்த்து வந்தாராம். ஆனால் தன்னுடைய முன்னாள் கணவருடன் தங்கி இருந்த அந்த வீடு தான் தனக்கு ஏற்றார் போல் இருந்ததாகவும் அதனால் தான் சமந்தா அடம்பிடித்து அந்த வீட்டையே வாங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர். அந்த வீட்டில் சமந்தா தனது தாயாருடன் தற்போது குடியேறியுள்ளதாக கூறுகின்றனர்.
சமந்தாவிற்கு “யசோதா”, “சகுந்தலா” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றது. மேலும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து “குஷி” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.