CINEMA
சல்மான் கான்- ஷாருக் கான்- ஏ ஆர் முருகதாஸ்… அவங்க கூடவே அமீர் கான்.. டெரிஃபிக் காம்போ??
சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோரை இணைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளாராம் ஏ ஆர் முருகதாஸ். அதில் அமீர் கானின் பங்கு என்ன தெரியுமா?
பாலிவுட்டின் பிரபல கான் நடிகர்களான அமீர் கான், சல்மான் கான், ஷாருக் கான் ஆகியோர் மாஸ் ஹீரோக்களாக வலம் வருபவர்கள். இவர்களுக்கு உலகளாவிய மார்க்கெட் உண்டு. இவர்களின் திரைப்படங்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் ரசித்து பார்ப்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் மீட்டரை புரிந்து கொண்டு படம் நடிப்பவர்கள்.
எனினும் ஷாருக் கானுக்கும், சல்மான் கானுக்கும் சமீப காலமாக வெளிவந்த சில திரைப்படங்கள் சரியாக கைக்கொடுக்கவில்லை. குறிப்பாக ஷாருக் கானுக்கு சமீப காலமாக வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியையே கண்டன. ஷாருக் கான் தற்போது அட்லி இயக்கத்தில் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் நிச்சயமாக ஷாருக் கானுக்கு கைக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இவர்கள் இருவரையும் இணைத்து ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம். இது குறித்து மூவருக்கும் இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளதாம். மேலும் இந்த இருவரையும் இணைக்க ஏ ஆர் முருகதாஸ் அமீர் கானின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. அப்படி என்றால் இத்திரைப்படத்தை அமீர் கான் தயாரிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ ஆர் முருகதாஸ் ஹிந்தியில் “கஜினி”, “ஹாலிடே”, “அகிரா” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
