CINEMA
நக்சல் இயக்கத்தில் சேர்ந்த சாய் பல்லவி..? புதிய திரைப்படம், புதிய அப்டேட்
சாய் பல்லவி நக்சல் போராளியாக நடித்த புதிய திரைப்படம் ஓடிடியில் வெளிவர உள்ளது.
“பிரேமம்” திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் சாய் பல்லவி. இவர் நடிகை மட்டுமல்லாது சிறப்பாக நடனம் ஆடுபவரும் கூட. உலகமெங்கும் ஹிட் அடித்த “ரவுடி பேபி” பாடலில் இவர் ஆடிய வெறித்தனமான ஆட்டத்தை நாம் மறந்திருக்க முடியாது.
இவர் தற்போது “கார்கி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதனிடையே சாய் பல்லவி, ராணா ஆகியோர் நடித்த “விராட பருவம்” திரைப்படம் கடந்த 17 ஆம் தேதி வெளிவந்தது. 1990களில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு நக்சல் போராளிக்கும் சாதாரண ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் காதல் தான் இத்திரைப்படத்தின் மையக் கரு.
சாய் பல்லவி நக்சல் ஊடுருவும் கிராமத்தில் இருக்கிறார். அங்கே போலீஸார்கள் எப்போதும் குவிந்து கிடக்கிறார்கள். சாய் பல்லவிக்கு ஒரு கவிதை புத்தகம் கிடைக்கிறது. அந்த கவிதை புத்தகம் பிடித்து போக, இதை எழுதியவர் யார் என்ற தேடலில் சாய் பல்லவி செல்கிறார். அந்த தேடல் அவரை நக்சல் போராளி ராணாவிடம் கொண்டு வந்து சேர்க்கிறது.
இத்திரைப்படத்தில் ராணா, சாய் பல்லவி உட்பட பிரியாமணி, நிவேதா பெத்துராஜ், நந்திதா தாஸ், நவீன் சந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். வேணு உடுகுலா இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். சுரேஷ் பொப்பிளி இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தனி சாலோ மற்றும் திவாகர் மணி ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ‘விராட பருவம்” திரைப்படத்தின் வெளியீடு குறித்தான ஒரு முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 1 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
A relentless quest for love and freedom!
Get ready to experience the world of Virata Parvam, coming to Netflix on 1st of July in Telugu, Malayalam and Tamil! #VirataParvamOnNetflix pic.twitter.com/44ks2WaJLl
— Netflix India South (@Netflix_INSouth) June 29, 2022
