Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஆஸ்காருக்கு செல்லும் “ஆர் ஆர் ஆர்”… வியப்பூட்டும் தகவல்

CINEMA

ஆஸ்காருக்கு செல்லும் “ஆர் ஆர் ஆர்”… வியப்பூட்டும் தகவல்

“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் ஆஸ்காருக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் “ஆர் ஆர் ஆர்”. இத்திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர்.

“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதிலும் வெறித்தனமான வெற்றியை பெற்றது. ரூ. 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் ஆஸ்கார் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் உலகளவில் பல அங்கீகாரத்தை பெற்று வருகிறது. சமீபத்தில் கூட ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக நடத்தப்படும் “ஹாலிவுட் கிரிடிக் அசோஷியேசன் மிட் சீசன்” விருது விழாவில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் “Cha Cha”, “Elvis”, “Marcel”, “Batman” “The North Man”, “Massive Talent”,”Top Gun Maverick”, “Turning Red” ஆகிய பிரபல ஹாலிவுட் திரைப்படங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு ரன்னர் அப் வரை வந்தது.

இதனை தொடர்ந்து தற்போது உலகப் பிரசித்தி பெற்ற விருதான ஆஸ்கார் விருது பரிந்துரை பட்டியலில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தோடு இருக்கின்றனர்.

“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் நிச்சயம் ஆஸ்கார் விருது வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top