CINEMA
ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை தவற விட்ட நடிகர் இவர் தான்?
“விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தை தவற விட்ட நடிகர் யார் தெரியுமா?
“விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா கேமியோ ரோலில் செய்த ரோலக்ஸ் கதாப்பாத்திரம் வேற லெவல் மாஸான கதாப்பாத்திரமாக அமைந்தது. சூர்யாவின் வில்லத்தனமான கெட் அப்பும் கொலை வெறியான லுக்கும் ரசிகர்களை “ஓ” போட வைத்தது.
சூர்யா “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்கு கமல் ஹாசன் அன்பு பரிசாக சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை அளித்திருந்தார். மேலும் “ரோலக்ஸ்’ கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக சூர்யா சம்பளம் வாங்கவில்லை என சமீபத்தில் கமல் ஹாசன் பேசிய விடியோ மூலம் தெரிய வந்தது.
இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு முதலில் மலையாள நடிகர் பிரித்விராஜை தான் படக்குழு அணுகியுள்ளது. ஆனால் சில காரணங்களால் பிரித்விராஜால் நடிக்க முடியவில்லையாம். அதன் பின்பு தான் சூர்யாவை அணுகி உள்ளனராம்.
“விக்ரம்” திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 400 கோடிக்கும் மேல் கல்லா கட்டி வருகிறது. இதனால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குறிப்பாக கமல் ஹாசன் தனது திரைப் பயணத்தில் முக்கிய வெற்றியாக “விக்ரம்” திரைப்படம் அமைந்திருப்பதால் மிகவும் குஷியாக இருக்கிறார். இயக்குனர், நடிகர் ஆகியோருக்கெல்லாம் பரிசுகளை அள்ளி வழங்கினார்.
“விக்ரம்” திரைப்படம் பல வருடங்கள் கழித்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்னேஷ்னல் நிறுவனத்திற்கு அதிக கலெக்சனை அள்ளித் தந்திருக்கிறது. இதற்கு முன் கமல் ஹாசன் தயாரித்த எந்த திரைப்படமும் இந்தளவு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தான் “விக்ரம்” திரைப்படம் வெளிவந்து கல்லா கட்டி வருகிறது. “விக்ரம்” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 8 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
