CINEMA
“ராக்கி பாய் இனிமே கன்னட ஹீரோ கிடையாது”.. தயாரிப்பாளர் பகீர் கருத்து
ராக்கி பாய் “யாஷ்” இனிமே கன்னட ஹீரோ கிடையாது என கே ஜி எஃப் தயாரிப்பாளர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“கே. ஜி. எஃப் 2 ” திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்டது. பாக்ஸ் ஆஃபிஸில் 1000 கோடிகளுக்கு மேல் அள்ளிக்கொண்டு இருக்கிறது.
“கே. ஜி. எஃப்.” முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் Goosebumps காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. மேலும் திரைப்படத்தின் இடை இடையே வரும் அம்மா சென்டிமென்ட்களும் “தன்னானத்தானே” குரலும் நம்மை நெகிழச் செய்யவும் தவறவில்லை.
கே ஜி எஃப் திரைப்படத்தில் இருந்து நடிகர் யாஷ் இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாக வளர்ந்தார். அந்த அளவுக்கு கே ஜி எஃப் திரைப்படம் இந்தியா முழுவதும் ஒரு பெரும் புயலை கிளப்பியது.
இந்நிலையில் கே ஜி எஃப் திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஒரு பகீர் கருத்தை வெளியிட்டிருக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது “இனி யாஷ் கன்னட ஹீரோ கிடையாது” என கூறியுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் அவர் அப்படி கூறவில்லை. முழு விவரம் என்னவென்றால் “யாஷ் தற்போது மிகப் பெரிய இந்திய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இனி அவர் கன்னட நடிகரோ தென்னிந்திய நடிகரோ கிடையாது, எனவே அவரால் இனி சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க முடியாது. Pan India திரைப்படங்களில் மட்டுமே இனி அவர் நடிப்பார்” என புகழ்ந்துள்ளார்.
கே. ஜி எஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் “சலார்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் அதன் பிறகு அவர் ஜூனியர் என் டி ஆர்ருடன் கை கோர்க்கிறார். கே ஜி எஃப் மூன்றாம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இக்கருத்தை சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.