CINEMA
“நம்ம வீட்டுக்கு ஒரு குட்டி விருந்தாளி”… “வீட்ல விசேஷம்” படத்தின் அட்டகாசமான Sneak peek..
ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் வீட்ல விசேஷம் திரைப்படத்தின் அட்டகாசமான Sneak peek வெளியாகி இருக்கிறது.
ஆர். ஜே. பாலாஜியின் குரல் தமிழகத்திற்கு மிகவும் பரிச்சயமான குரல் என்றாலும் “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து ஒரு நடிகராக பரவலாக அறியப்பட்டார்.
ஐ பி எல் போட்டிகளில் இவரது கிரிக்கெட் கமென்ட்ரிகளுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. “நானும் ரவுடி தான்” திரைப்படத்தை தொடர்ந்து “எல் கே ஜி” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். “Political satire” வகையரா திரைப்படமான “எல் கே ஜி” ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதன் பின் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தார். அத்திரைப்படமும் கலக்கலான வெற்றியைப் பெற்றது. இதனை தொடர்ந்து ஆர். ஜே. பாலாஜி “வீட்ல விஷேசம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் ஊர்வசி, சத்யராஜ், குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் “பதாய் ஹோ” என்ற பாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைபடத்தை ஆர். ஜே. பாலாஜி, என். ஜே. சரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். கிரீஷ் ஜி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“வீட்ல விசேஷம்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான Sneak peek தற்போது வெளிவந்துள்ளது.
இதில் ஆர் ஜே பாலாஜி தன்னுடைய அப்பா சத்யராஜ்ஜிடம் அம்மாவிற்கு என்னாச்சு என கேட்கிறார். அதற்கு அவர் மிகவும் தயக்கமாக “நம்ம வீட்டிற்கு ஒரு….” என்ற சஸ்பென்ஸுடன் அந்த Sneak peek முடிகிறது.