CINEMA
ப்ளூ சட்டை மாறனை பங்கமாய் கலாய்த்த ஆர். ஜே. பாலாஜி…
ப்ளூ சட்டை மாறனை போலவே பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் ஆர். ஜே. பாலாஜி.
“வீட்ல விசேஷம்” திரைப்படம் சென்ற வாரம் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் Family Audience –ஐ வெகுவாக கவர்ந்துள்ளது. கதாநாயகனின் தாயாருக்கு 50 வயது இருக்கும். அந்த வயதிலும் திடீரென கர்ப்பமாகிறார்.
இந்த விஷயத்தை சமூகம் எப்படி அணுகுகிறது? தன் மகனுக்கே திருமண வயது இருக்கும்போது இதனை மகன் ஏற்றுக் கொள்வானா? என்ற சர்ச்சையான விஷயத்தை கலகலப்பாகவும் பக்கா என்டெர்டெயினிங்காகவும் கொண்டு சேர்த்துள்ளது இத்திரைப்படம்.
இந்நிலையில் “வீட்ல விசேஷம்” வெற்றி குறித்து பல திரையரங்கு உரிமையாளர்கள் பல வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். அதனை எல்லாம் இணைத்து ஒரே வீடியோவாக ஆர். ஜே. பாலாஜி பகிர்ந்துள்ளார். அதில் பேசும் ஆர். ஜே. பாலாஜி பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை கேலி செய்யும் வகையில் அவரை போலவே பேசியுள்ளார்.
அதாவது ப்ளு சட்டை மாறன் “வீட்ல விசேஷம்” திரைப்படம் வெளிவந்த போது நெகட்டிவ் ரிவ்யூக்களே அளித்தார். இதனை தொடர்ந்து ஆர். ஜே. பாலாஜி அந்த வீடியோவில் “பச்சை சட்டை உனக்கு பிடிச்சா போதும். எந்த நீல சட்டைக்கும் பிடிக்க தேவை இல்லை” என விமர்சகர் மாறன் வாய்ஸிலேயே மிமிக்ரி செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#VeetlaVisheham நடந்தது என்ன ?😎 pic.twitter.com/2gfyIsJXP9
— RJ Balaji (@RJ_Balaji) June 21, 2022
“வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் ஊர்வசி, சத்யராஜ், குக் வித் கோமாளி புகழ், யோகி பாபு, மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் “பதாய் ஹோ” என்ற பாலிவுட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இத்திரைபடத்தை ஆர். ஜே. பாலாஜி, என். ஜே. சரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். கிரீஷ் ஜி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.