Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நெல்சனுக்கு சப்போர்ட்டுக்கு வந்த ஆர். ஜே. பாலாஜி.. என்ன பண்ணார் தெரியுமா?

CINEMA

நெல்சனுக்கு சப்போர்ட்டுக்கு வந்த ஆர். ஜே. பாலாஜி.. என்ன பண்ணார் தெரியுமா?

நெல்சனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் நிலையில் ஆர். ஜே. பாலாஜி அவருக்கு துணையாக நின்று பதிலடி தந்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பீஸ்ட்” திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. “பீஸ்ட்” திரைப்படம் வெளியான போது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தோடு திரையரங்கை விட்டு வெளியே சென்றனர். எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்த வண்ணம் இருந்தன.

இதனை தொடர்ந்து “பீஸ்ட்” திரைப்படத்தின் இயக்குனர் நெல்சனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பலரும் நெல்சனை மிகவும் மோசமாக கிண்டல் அடித்து மீம்களை பரப்பி வருகின்றனர்.

சமீபத்தில் கூட ஒரு சமூக ஊடக தொலைக்காட்சியின் விழாவில் பேசிய நெல்சன், “ஏற்கனவே நான் செம்மய்யா மாட்டிருக்கேன்” என கூறியதில் இருந்து அவர் மனதை எந்த அளவுக்கு அந்த மீம்கள் காயப்படுத்தி இருக்கும் என்பதை அறிய முடிந்தது.

இவ்வாறு இயக்குனர் நெல்சனை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்களை விளாசி தள்ளி உள்ளார் நடிகர் ஆர். ஜே. பாலாஜி. ஆர். ஜே. பாலாஜி தனது நடிப்பில் வருகிற 17 ஆம்  தேதி வெளிவர இருக்கும் “வீட்ல விஷேசம்” திரைப்படத்திற்காக ஒரு கலகலப்பான புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதற்கு கமெண்ட் அடித்த ஒருவர் “இதே மாதிரி Funny’ah தான் நெல்சனும் வீடியோ பண்ணாரு. அடேய் நெல்சா” என குறிப்பிட்டு ஒரு வடிவேலு டெம்ப்ளேட்டை பகிர்ந்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்த ஆர். ஜே. பாலாஜி “நெல்சன் ஒரு அற்புதமான இயக்குனர். அவருடன் பல நிகழ்ச்சிகளில் நான் பணியாற்றி உள்ளேன். அவரது திரைப்படங்களுக்கு நான் பெரிய ரசிகனும் கூட. அவர் மிகவும் திறமையானவர். வருங்காலத்தில் அவர் நல்ல நல்ல திரைப்படங்களை வழங்குவார் என நான் உறுதியாக கூறுகிறேன். அவரை கிண்டல் செய்வதை முதலில் நிறுத்துங்கள்
“ என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top