CINEMA
“பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இருக்கு”.. லெஜண்ட் பட நடிகையை வெளுத்து வாங்கிய கிரிக்கெட் வீரர்
“லெஜண்ட்” திரைப்பட நடிகை ஊர்வசி ரடேலா தனக்காக ஒரு கிரிக்கெட் வீரர் பல மணி நேரம் காத்திருந்தார் என கூறியதற்கு அந்த கிரிக்கெட் வீரர் பதிலடி கொடுத்துள்ளார்.
“தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த மாதம் 28 ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக திரையரங்குகளில் வெளிவந்தது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இத்திரைப்படத்தில் நடித்த இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் ஊர்வசி ரடேலா. இவர் ஆசியாவில் அதிகளவிலான ஃபாலோயர்ஸைக் கொண்ட நடிகை ஆவார். ஹிந்தியில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்தகொண்ட ஊர்வசி ரடேலா” நான் புது டெல்லியில் படப்பிடிப்பில் இருந்தேன். ஒரு நாள் முழுவதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரவு எனது ஹோட்டல் அறைக்கு திரும்பினேன். RP என்னை சந்திக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் நான் தூங்கிவிட்டேன். நான் எழுந்தவுடன் தான் எனது மொபைலை பார்த்தேன். கிட்டத்தட்ட 16-ல் இருந்து 17 மிஸ்ட் கால்கள் இருந்தது. அவரை வெகு நேரம் காக்க வைத்ததில் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அதன் பின் அவருக்கு தொடர்பு கொண்டு மும்பைக்கு வரும்போது நிச்சயம் சந்திக்கலாம் என கூறினேன்” என்று கூறினார்.
நிரூபர் அவரிடம் “யார் அந்த RP?” என கேட்டார். அதற்கு ஊர்வசி ரடேலா “அவரை யார் என்று சொல்ல மாட்டேன்” என கூறினார்.
இதனை தொடர்ந்து RP என்று அவர் கூறியது பிரபல கிரிக்கெட் வீரர் Rishab Pant-ஐ தான் என செய்திகள் பரவின. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரிஷப் பாண்ட் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் ”பிரபலமாக வேண்டும் என்பதற்காக சிலர் பேட்டிகளில் பொய் கூறுவதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. பிரபலம் ஆக வேண்டும் என்ற தாகம் அவர்களுக்கு நிறையவே இருப்பதை பார்க்க கவலையாக இருக்கிறது. கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் “என்னை விட்டுவிடுங்கள் தங்கையே, பொய் சொல்வதற்கும் ஒரு அளவு இருக்கிறது” எனவும் ஹேஸ்டேக்காக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு முன் வேறொரு பேட்டியில் ஒரு முறை ஊர்வசி ரடேலா, ரிஷப் பாண்ட்டின் பெயரை குறிப்பிடாமல் அவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறியுள்ளார். இதனை மறுக்கும் வகையில் ரிஷாப் பாண்ட் தனது பெண் தோழியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ஊர்வசி ரடேலாவையும் பிளாக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.