CINEMA
இனிமே எனக்கு இவ்வளவு சம்பளம் வேணும்… ராஷ்மிகா அதிரடி
ராஷ்மிகா மந்தனா தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் அறிமுகமானாலும் தற்போது இந்திய நடிகையாக வளர்ந்துவிட்டார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என தற்போது பிசியாக இருக்கிறார்.
தமிழில் தற்போது விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த “சீதா ராமம்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
தற்போது ஹிந்தியில் “குட் பாய்”, “மிஷன் மஜ்னு” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹிந்தியில் “அனிமல்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
“புஷ்பா” முதல் பாகத்தில் டாப் கிளாமராக கலக்கிய இவர் இதனை தொடர்ந்து “புஷ்பா” இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார். இவ்வாறு படுபிசியாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக ஒரு தகவல் வருகிறது. ராஷ்மிகா இதுவரை ஒரு படத்திற்கு 2 கோடி சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அவரது மார்க்கெட் இந்திய அளவில் எகிறி இருப்பதால் தனது சம்பளத்தை உயர்த்துவதாக முடிவெடுத்துள்ளாராம்.
தற்போது ஹிந்தியிலும் நடிப்பதால் தனது சம்பளத்தை 4 கோடி வரை உயர்த்தியுள்ளாராம். இது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ராஷ்மிகாவிற்கும் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. தென்னிந்தியாவில் அவருக்கு அதிக ரசிகர்கள் இருந்தும் “புஷ்பா” திரைப்படத்தில் நடித்த பிறகு அவருக்கு மவுஸ் கூடிவிட்டதாக அறியப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் தனது சம்பளத்தை தற்போது உயர்த்தியுள்ளார்.