CINEMA
புஷ்பா படத்தில் இருந்து வெளியேறினார் ராஷ்மிகா? திடுக்கிடும் தகவல்
“புஷ்பா 2” திரைப்படத்தில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்தது.
“புஷ்பா” திரைப்படம் வெளியான எல்லா மொழிகளிலும் மாஸ் ஹிட் ஆனது. பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக “ஓ சொல்றியா” “சாமி” ஆகிய பாடல்கள் எப்போதும் டாப் லெவல் டிரெண்டிங்கில் இருக்கிறது.
“ஓ சொல்றியா” பாடலில் சமந்தா ஆடிய ஐட்டம் டேன்ஸ் பார்வையாளர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதே போல் ராஷ்மிகா மந்தனா தனது பொன்னிற மேனியால் கவர்ச்சியில் மூழ்கி முத்து எடுத்து “சாமி” பாடலில் அவர் ஆடிய நடனம் வேற லெவல் ரீச் ஆனது.
இதனை தொடர்ந்து “புஷ்பா 2” திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில், அல்லு அர்ஜூன் ஆகிய இருவரை சுற்றியே திரைக்கதை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கே ஜி எஃப் 2” திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு “புஷ்பா 2” திரைப்படத்தின் திரைக்கதையை சற்று பலப்படுத்தி வருவதாக செய்திகள் வந்தன.
இதனால் ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாப்பாத்திரத்தின் பங்களிப்பை திரைக்கதையில் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளி வந்தன. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா “புஷ்பா 2” திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது.
ஆனால் ராஷ்மிகா மந்தனா நீக்கப்படவில்லை எனவும், அவரது பகுதிகளை மிகவும் குறைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூடுதல் தகவலாக “புஷ்பா 2” திரைப்படத்தில் ஒரு வெளிநாட்டு நடிகை நடிக்க உள்ளதாகவும் அவருக்கு தான் திரைப்படத்தில் முக்கிய ரோல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
