Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் ரன்வீர் சிங் கொடுத்த போஸ்.. வைத்து செய்யும் நெட்டிசன்கள்

CINEMA

உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் ரன்வீர் சிங் கொடுத்த போஸ்.. வைத்து செய்யும் நெட்டிசன்கள்

நிர்வாணமாக பல போஸ் கொடுத்த ரன்வீர் சிங்கின் புகைப்படங்களை தற்போது நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான ரன்வீர் சிங் “பாஜிராவ் மஸ்தானி”, “பத்மாவதி” ஆகிய பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் சமீபத்தில் வெளியான “83” திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் கபில் தேவ் கதாப்பாத்திரத்தில் வந்து நம் உள்ளங்களை கொள்ளைக் கொண்டார். அதன் பின் கடந்த மே மாதம் வெளியான “ஜாயேஷ் பாய் ஜோர்டார்” என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரன்வீர் சிங் சமீபத்தில் கூட “மேன் VS வைல்ட்” புகழ் பியர் கிரில்ஸுடன் காட்டுக்குள் பல சாகசங்களை நிகழ்த்தினார்.

ரன்வீர் சிங் தனது உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பவர். மேலும் அவர் பல பல வித்தியாசமான உடைகள் அணிந்து ஃபோட்டோஷூட் நடத்தி பல புகைப்படங்களை வெளியிடுவார். இதனால் இவரை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்வார்கள்.

இந்நிலையில் தற்போது நெட்டிசன்களுக்கு பெரிய தீனியே கிடைத்தது போல் ஒரு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார் ரன்வீர் சிங். பேப்பர் என்ற இதழுக்கு ஒரு ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அதுவும் உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் வித்தியாசமான முறையில் பல போஸ்கள் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படங்களை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் மத்தியிலும் மீம் கிரியேட்டர்கள் மத்தியிலும் எப்போதும் பேச்சு பொருளாக இருப்பவர் ரன்வீர் சிங். அந்தளவுக்கு இவர் செய்யும் அனைத்தையும் கன்டென்ட் ஆக்குவார்கள். இந்நிலையில் தற்போது இவர்களுக்கு அல்வா போல் ஒரு கன்டென்ட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top