Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்ட கார்த்தி பட நடிகை..

CINEMA

இந்தியன் 2 திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொண்ட கார்த்தி பட நடிகை..

“இந்தியன் 2” திரைப்படப் படப்பிடிப்பில் கார்த்தி பட நாயகி கலந்துகொண்டுள்ளார்.

“இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் காஜல் அகர்வால் கலந்துகொண்டார். மேலும் பாபி சிம்ஹாவும் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் தற்போது நடிகை ரகுல் பிரீத் சிங் “இந்தியன் 2” படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த 24 ஆம் தேதி “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், குரு சோமசுந்தரம், சமுத்திரகனி, மனோபாலா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

“இந்தியன் 2” திரைப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

“இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்முரமாக நடைபெற்றது. ஆனால் துர்திஷ்டவசமாக படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூவர் பலியான செய்தி திரைத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியது.

அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பின் எப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஆனால் கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்திலும் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். ஆதலால் “இந்தியன் 2” படப்பிடிப்பு அப்படியே முடங்கியது.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலினும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top