CINEMA
“இப்படி ஒன்னு பண்ணதுக்கு அவர கண்டிப்பா பாராட்டனும்..” நெகிழ்ச்சியில் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “ராக்கெட்ரி” திரைப்படத்தை பார்த்துள்ள நிலையில் தற்போது அத்திரைப்படம் குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுத்த திரைப்படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்”. இத்திரைப்படத்தை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார். அவருடன் இணைந்து சிம்ரன், ஷாருக் கான், சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
“ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் கடந்த 1 ஆம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாதவன் நம்பி நாராயணன் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். தனது நாட்டின் மேல் கொண்டிருக்கும் பற்றையும் தேச துரோக குற்றத்தை எதிர்கொள்ளும் தருணத்தையும் மிகவும் Balanced ஆக தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருந்தார்.
அவரது மனைவி மீனாவாக வரும் சிம்ரன், யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கணவருடன் காதல் கொள்ளும் காட்சிகளில் பார்வையாளர்களை கவர்கிறார். ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், மிஷா கோஷல் என பலரும் தங்களது கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா முக்கியமான கேமியோ ரோலில் கலக்கி இருந்தார்.
படத்தின் பலமே வசனங்கள் தான். “ஒரு நாயை கொல்ல வேண்டும் என்றால் அது வெறி நாய் என கூறினால் போதும்” என்று படத்தில் வந்த வசனம் பளீச்சென நமது நிதர்சனத்தை காட்டியது. திரைக்கதையை எந்த வித சலிப்பும் தட்டாமல் கொண்டு சென்றிருந்தார் இயக்குனர் மாதவன்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி திரைப்படம் பார்த்து விட்டு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “ராக்கெட்ரி திரைப்படத்தை இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இஸ்ரோ விஞ்ஞானி பத்ம பூசன் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக படமாக்கி தனது முதல் படத்திலேயே மாதவன் தலைசிறந்த இயக்குனருக்கு இணையாக நிரூபித்துள்ளார்” என பாராட்டியுள்ளார்.
@ActorMadhavan #Rocketry pic.twitter.com/bmQpoY7fsR
— Rajinikanth (@rajinikanth) July 4, 2022