CINEMA
செஸ் ஒலிம்பியாட்….மும்முரமாக செஸ் விளையாடும் ரஜினிகாந்த்… வைரல் புகைப்படம்
ரஜினிகாந்த் மும்முரமாக செஸ் விளையாடும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
செஸ் பிரியர்களிடம் மிகவும் பிரபலமான போட்டி என்றால் அது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தான். தற்போது 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்கியது. இந்த போட்டி இன்று முதல் ஆகஸ்து மாதம் 10 ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் கிட்டத்தட்ட 180 நாடுகள் பங்குபெறுகின்றன. அந்நாடுகளில் இருந்து சுமார் 2,000க்கும் அதிகமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபெறுகின்றனர். இந்தியாவில் இருந்து 30 பேர் பங்குபெறுகின்றனர். இந்த செஸ் போட்டி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.
இந்த செஸ் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் மும்முரமாக செஸ் விளையாடும் ஒரு பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “ எனக்கு மிகவும் பிடித்த உள்ளரங்க விளையாட்டு என்பது செஸ் தான். செஸ் ஒலிம்பியாடில் பங்குபெரும் அனைத்து செஸ் மூளைகளுக்கும் எனது வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
#ChessOlympiad2022 An indoor game I love the most … wishing all the chess minds the very best .. god bless. pic.twitter.com/nVZ8SU51va
— Rajinikanth (@rajinikanth) July 28, 2022
ரஜினிகாந்த் “அண்ணாத்த” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் Pre Production பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
