CINEMA
வதந்தி நிஜம் ஆகியது…“தலைவர் 169” டைட்டில் என்ன தெரியுமா?
ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 169” திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.
“பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியை வைத்து இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களுக்கு அத்திரைப்படம் திருப்தி அளிக்கவில்லை.
ஆதலால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் இயக்குனர் நெல்சனை கேலி செய்து பல மீம்களை இறக்கி வந்தனர்.
“பீஸ்ட்” திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூக்களே அதிகம் வந்ததால் ரஜினி நெல்சன் திரைப்படத்தில் இருந்து விலகி விடுவார் என வதந்தி பரவியது. ஆனால் ரஜினி-நெல்சன் கூட்டணி கன்ஃபார்ம் ஆனது.
இதனை தொடர்ந்து “தலைவர் 169” திரைப்படத்தின் Pre-production பணிகள் தொடங்கின. திரைக்கதையில் கூடுதல் பலம் சேர்க்க இயக்குனர் நெல்சனுடன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளிவந்தது.
“தலைவர் 169” திரைப்படத்தின் கதை ஒரு சிறைச்சாலையை மையப்படுத்தி தான் அமைகிறது எனவும் இத்திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என பெயர் வைத்திருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் பரவின.
இந்நிலையில் தற்போது இந்த தகவல்கள் நிஜமாகி உள்ளன. அதாவது “தலைவர் 169” திரைப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அத்திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என பெயர் வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் இணையத்தில் பரவிய செய்திகள் நிஜமாகி உள்ளன.
போஸ்டரில் ரத்தக் கரையுடன் ஒரு கத்தி தொங்குகிறது. அதன் பின்னணி ஒரு பெரிய சிறைச்சாலையாக தெரிகிறது. இதனை கொண்டு ஒரு பக்கா ஆக்சன் திரைப்படமாக இது அமையப்போவதாக வியூகிக்க முடிகிறது. “ஜெயிலர்” திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thalaivar169 is #Jailer@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/tEtqJrvE1c
— Sun Pictures (@sunpictures) June 17, 2022