CINEMA
“விக்ரம் சூப்பரா இருக்கு”…சூப்பர் ஸ்டார் பாராட்டு மழை
“விக்ரம்” திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் கமல்ஹாசனை அழைத்து பாராட்டியுள்ளார்.
“விக்ரம்” திரைப்படம் கடந்த இரண்டு நாட்கள் முன் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் பலரும் படம் மாஸ் ஹிட் என சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “விக்ரம்” திரைப்படத்தை கண்டு கழித்தார். அதன் பின் தற்போது கமல்ஹாசனை தொலைப்பேசியில் அழைத்து “கலக்கிட்டீங்க கமல், படம் சூப்பரா இருக்கு” என பாராட்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாது இசையமைப்பளர் அனிருத், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் மகேந்திரன் ஆகியோரையும் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் “Friendship என்றால் இதுவல்லவா?” என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
கமல், ரஜினி ஆகியோர் இணைந்து ஆரம்ப காலத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். அவர்களின் திரைப்படத்திற்கு இடையே தான் போட்டி இருக்குமே தவிர அவர்கள் நீண்ட கால நண்பர்களாகவே திகழ்கிறார்கள்.
ரஜினிகாந்தை பொருத்தவரை எந்த திரைப்படமாக இருந்தாலும் படம் வரவேற்பை பெற்றால் அத்திரைப்படத்தின் குழுவினரை அழைத்து பாராட்டுவார். சமீபத்தில் கூட “டான்” திரைப்படத்தை பார்த்து தான் கண்ணீர் விட்டதாக சிவகார்த்திகேயனை வீட்டிற்கே அழைத்து பாரட்டினார். இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் கமலை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டியுள்ளார்.
உலகளவில் “விக்ரம்” திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் ரெஸ்பான்ஸ்களே அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் திரையரங்குகளில் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் “விக்ரம்” திரைப்படம் கமல் திரைப்பட வரலாற்றிலேயே செய்யாத சாதனையை செய்துள்ளது. அதாவது கடந்த இரண்டே நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ளது. இது கமல் திரைப்பட வரலாற்றிலேயே அதிவேக வசூல் என கூறப்படுகிறது.