CINEMA
“என்னப்பா அழுக வச்சிட்ட?” கண்ணீருடன் சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி..
“டான்” திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீருடன் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை பாராட்டிய செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டான்” திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. வழக்கம்போல் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் வரும் கமர்சியல் அம்சங்கள் திரைப்படங்களில் அதிகமாக இடம்பெற்றுள்ளன.
சிவகார்த்திகேயனின் தந்தையான சமுத்திரக்கனி, ஒரு ஸ்டிரிக்ட் அப்பா எப்படி இருப்பாரோ அந்த யதார்த்தத்தை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரி மாணவனாக வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிளிர்கிறார். நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி எனர்ஜி லெவலில் மாஸ் காட்டுகிறார் என பரவலாக இணையத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
பிரியங்கா மோகன் அழகு பதுமையாக வந்து கண்களுக்கு காட்சி தருகிறார். அதை தாண்டி நடிப்பில் அவ்வளவாக ஸ்கோர் செய்யவில்லை என விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்து வருகின்றன. பால சரவணன், ஷிவாங்கி, காளி வெங்கட், முனிஸ்காந்த், ராதாரவி ஆகியோர் தாங்கள் ஏற்ற கதாப்பாத்திரத்திற்கு நன்றாக நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் அல்டிமேட் பலம் எஸ். ஜே. சூர்யா தான். அவரின் நடிப்பை பற்றி நாம் கூற தேவையில்லை. வில்லனாக மாஸ் காட்டுகிறார். தனது நடிப்பால் சக நடிகர்கள் மீது கண்களை போக விடாமல் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார் என பல சினிமா விமர்சகர்கள் எழுதி வந்தனர்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற அப்பா சென்டிமன்ட் காட்சிகளில் திரையரங்கமே கண்ணீர் வடித்ததாக ரசிகர்கள் கூறிவந்தனர்.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் “டான்” திரைப்படத்தை குறித்து படக்குழுவினருக்கு தெலைப்பேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது “சூப்பர் பா, கடைசி முப்பது நிமிஷம் என்னால கண்ணீரை அடக்க முடியல” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
