CINEMA
விக்னேஷ் சிவன் பிரபு தேவா மாதிரியே இருக்குறார்.. நயன்தாராவிடம் கொளுத்தி போட்ட ராகுல் தாத்தா
விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் நயன்தாராவிடம் கொளுத்தி போட்ட சம்பவத்தை குறித்து பகிர்ந்துள்ளார் ராகுல் தாத்தா.
கடந்த 2015 ஆம் ஆன்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. இத்திரைப்படத்தில் ராகுல் தாத்தா என்ற கதாப்பாத்திரம் பரவலாக ரசிக்கப்பட்டது. இதில் ராகுல் தாத்தாவாக நடித்தவர் உதயபானு.
இவர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். “நானும் ரவுடி தான்” திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ராகுல் தாத்தா என்ற கதாப்பாத்திரம் தான் மக்கள் மனதில் நிலைபெற்று நின்றது. ஆதலால் இவரை பலரும் ராகுல் தாத்தா என்றே அழைக்கத் தொடங்கினர்.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குகொண்ட ராகுல் தாத்தா சில வாரங்களிலேயே எலிமினெட் ஆனார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பிரபல யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்த ராகுல் தாத்தா “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து பகிர்ந்து கொண்டார்.
“எனக்கு நடிப்பே வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த ஊருக்கு புறப்படலாம் என நினைத்திருந்தேன். அப்போது தான் தனுஷ் கம்பெனியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மாரி திரைப்படத்தில் புறா வளர்க்கும் ஒரு முதியவர் கேரக்டருக்கு ஆடிஷன் நடந்தது. அப்போது தான் விக்னேஷ் சிவன் என்னை பார்த்தார்.
அவரது படத்தில் ஒரு கதாப்பாத்திரம் இருக்கிறது, அதில் நான் தான் நடிக்க வேண்டும் என தனுஷிடம் கேட்டு என்னை அழைத்துக்கொண்டு போனார். அப்படித்தான் அந்த படம் எனக்கு அமைந்தது” என கூறினார்.
மேலும் பேசிய அவர் “நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது நான் விக்னேஷ் சிவனிடம் சென்று நீங்கள் பார்ப்பதற்கு பிரபு தேவா மாஸ்டர் போல் இருக்கிறீர்கள் என கூறினேன். அதன் பிறகு நயன்தாராவிடம் சென்று விக்னேஷ் சிவன் பார்ப்பதற்கு பிரபு தேவா போலவே இருக்கிறார் என்றேன். அவர்களுக்கு நான் தான் வழிகாட்டி” என்று கூறினார். ராகுல் தாத்தா கூறியது தற்போது சர்ச்சையாகி உள்ளது. நயன்தாரா இதற்கு முன் பிரபு தேவாவை காதலித்தார் என்பது நம் எல்லோரும் அறிந்ததே.