CINEMA
“இது ரஹ்மானோட மேஜிக் தான்…” புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதி” பாடல் நேற்று வெளிவந்த நிலையில் ரசிகர்கள் உற்சாகம்.
மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படத்தில் த்ரிஷா. கார்த்தி, ஜெயம் ரவி, சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன் என பலரும் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவின் நட்சத்திரப் பட்டாளமே இத்திரைப்படத்தில் தென் படுகிறார்கள்.
ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பேன் இந்தியா திரைப்படமாக வெளிவருகிறது.
இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது. இதில் கார்த்தி இடம்பெருகிறார்.
காவேரியின் கிளை நதியான பொன்னி நதியின் கரையில் வந்தியத்தேவனான கார்த்தி குதிரையில் சென்றபடி அந்நதியின் அழகை ரசித்து பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பாடலில் இடம்பெற்ற “பொன்னி நதி பார்க்கனுமே, பொழுதுக்குள்ள’ என்ற வரியில் அந்த நதியை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் அந்த கதாப்பாத்திரத்திற்கு இருப்பதாக தெரிகிறது.
இப்பாடல் வெளிவந்ததில் இருந்து ஏ ஆர் ரகுமான் ரசிகர்களுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. 5 மொழிகளிலும் இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “உலக லெவல் இசை”, “ரஹ்மானின் மேஜிக்” என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
இப்பாடலில் இடம்பெற்ற பாடல் வரிகள் சோழ நாட்டின் பெருமைகளையும் பொன்னி நதியின் அழகையும் வர்ணிக்கிறது. இப்பாடலை எழுதியவர் இளங்கோ கிருஷ்ணன். எனினும் பலர் இப்பாடலை வைரமுத்து எழுதியிருக்கலாம் என்ற விமர்சனத்தையும் வைப்பது குறிப்பிடத்தக்கது.
