CINEMA
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் புஷ்பா 2 படத்தின் நியூ அப்டேட்..
ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் “புஷ்பா 2” திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக வெளிவந்தது.
“புஷ்பா” திரைப்படம் வெளியான எல்லா மொழிகளிலும் மாஸ் ஹிட் ஆனது. பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக “உ சொல்றியா”, “சாமி” ஆகிய பாடல்கள் இப்போதும் டாப் லெவல் டிரெண்டிங்கில் இருக்கிறது.
குறிப்பாக “உ சொல்றியா” பாடலில் சமந்தா ஆடிய ஐட்டம் டேன்ஸ் பார்வையாளர்களின் தூக்கத்தை கெடுத்தது. அதே போல் ராஷ்மிகா மந்தனா தனது பொன்னிற மேனியை காட்டு காட்டு என காட்டிய “சாமி” பாடலில் அவர் ஆடிய நடனம் வேற லெவல் ரீச் ஆனது.
இதனை தொடர்ந்து “புஷ்பா 2” திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில், அல்லு அர்ஜூன் ஆகிய இருவரை சுற்றியே திரைக்கதை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. “புஷ்பா 2” திரைப்படத்தில் ஒரு வெளிநாட்டு நடிகை நடிக்க உள்ளதாகவும் அவருக்கு தான் திரைப்படத்தில் முக்கிய ரோல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
“புஷ்பா” முதல் பாகத்தில் நடித்த ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இதிலும் தொடர்வார்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது “புஷ்பா 2” திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெறுகிறது. ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“புஷ்பா 2” திரைப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
