Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

புது மாப்பிளை ஆகப்போகும் விஜய் டிவி புகழ்…? அவரே பகிர்ந்த புகைப்படம்

CINEMA

புது மாப்பிளை ஆகப்போகும் விஜய் டிவி புகழ்…? அவரே பகிர்ந்த புகைப்படம்

விஜய் டிவி புகழ் தனக்கு விரைவில் திருமணம் என ஒரு புகைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் மூலம் புகழ்பெற்ற சந்தானம், சிவகார்த்திகேயன் ஆகியோரை தொடர்ந்து அவர்களின் வரிசையில் தற்போது நிற்பது புகழ். தன் ஆரம்ப காலத்தில் மிகவும் போராடி விஜய் தொலைக்காட்சியில் நுழைந்த இவர் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கத் தொடங்கினார். அதனை தொடர்ந்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார். அதன் பின் புகழின் புகழ் உச்சத்தை தொட்டது.

இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உருவானது. இதனை தொடர்ந்து புகழ் “சிக்சர்”, “சபாபதி”, “என்ன சொல்ல போகிறாய், “வலிமை”, “வீட்ல விஷேசம்”, “யானை”, “காசேதான் கடவுளடா”, “யானை” என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரின் வளர்ச்சி பலரையும் வியக்க வைத்துள்ளது. தொடர்ந்து போராடினால் வெற்றியை நிச்சயமாக அடையலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு புகழ் தான். அந்த அளவுக்கு மக்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார்.

புகழ், பென்ஸ் ரியா என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து வருவதாக சமீபத்தில் கூறினார். மேலும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில் புகழ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் புகழ் கடற்கரையில் ஒரு நீண்ட முகம் பார்க்கும் கண்ணாடியை கையில் வைத்திருக்கிறார். அதில் பென்ஸ் ரியாவின் பிம்பம் தெரிகிறது. பென்ஸ் ரியா கிறுஸ்துவ முறைப்படியான மணக்கோலத்தில் தென்படுகிறார். அப்புகைப்படத்தில் Coming Soon என குறிப்பிட்டுள்ளது. இதனை கொண்டு புகழ் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக செய்திகள் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top