CINEMA
தனது உயிரை துச்சமாக மதித்த விஜயகாந்த்.. தயாரிப்பாளரின் பேத்தி வெளியிட்ட Rare புகைப்படம்
சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் விஜயகாந்த் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் செய்த ஸ்டண்ட் காட்சியின் புகைப்படத்தை தயாரிப்பாளரின் பேத்தி வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்பு முனையான திரைப்படமாகும். இதில் ஒரு சண்டைக் காட்சியில் விஜயகாந்த் ஒரு பெரிய மணிக்கூண்டில் உள்ள கடிகாரத்தில் ஏறுவார். இக்காட்சி அத்திரைப்படத்தில் பார்வையாளர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட காட்சியாகும்.
இந்நிலையில் இந்த காட்சியின் படப்பிடிப்பு குறித்து ஏவிஎம் புரொடக்சன் நிறுவனத்தாரின் பேத்தி அருணா குகன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ஆச்சரியமூட்டும் செய்தியை பகிர்ந்துள்ளார்.
அதாவது இந்த சண்டைக் காட்சியில் விஜயகாந்த் எந்த வித டூப்பையும் பயன்படுத்தவில்லையாம். அவரே அந்த மணிக்கூண்டில் எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏறினாராம். இவ்வாறு அந்த பதிவில் அருணா குகன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில் “தாத்தா, விஜயகாந்த்தின் சினிமா வேட்கையை குறித்து என்னிடம் கூறியிருக்கிறார். சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் இடம்பெரும் இந்த காட்சியில் எந்த வித ரோப்பும் இல்லாமல் டூப்பும் இல்லாமல் அவராகவே இந்த மணிக்கூண்டில் ஏறியிருக்கிறார். இந்த காட்சியை ரசிகர்கள் ஆரவாரமாக ரசித்தார்கள்” என கூறியுள்ளார். அருணா குகன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
On popular request, #AVMTrivia from Sethupathi IPS.
There was no rope-technique used and Thatha has spoken of Vijayakanth sir’s commitment and passion to execute scenes and fights without a stunt double. This scene on the clock tower had audiences gripped. @avmproductions pic.twitter.com/YGcauXuEwx
— Aruna Guhan (@arunaguhan_) June 30, 2022
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகாந்த் கேப்டன் என செல்லமாக அழைக்கப்பட்டார். 1980களில் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் டாப்பில் இருந்த போது சைலண்ட்டாக வந்து பல ரசிகர்களை கைக்குள் போட்டுக் கொண்டார்.
பத்தாண்டுகளுக்கு முன் அரசியலில் களமிறங்கிய விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாத நிலையில் இருக்கிறார். சமீபத்தில் கூட அவரது ரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாத காரணத்தால் அவரது கால் ஒன்றில் மூன்று விரல்கள் எடுக்கப்பட்ட பரிதாபகரமான நிலையும் நேர்ந்தது.
