CINEMA
“ஹாய் செல்லம்”…விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட சர்ப்ரைஸ் புகைப்படம்..
நடிகர் பிரகாஷ் ராஜ் “ஹாய் செல்லம்” என பதிவிட்டு தளபதி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஹாய் செல்லம்ஸ்ஸ்ஸ், வீ ஆர் back” என்று குறிப்பிட்டு “தளபதி 66” என்ற ஹேஷ் டேக்கை மென்ஷன் செய்துள்ளார். இது “தளபதி 66” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வருகிறது.
பிரகாஷ் ராஜும் விஜய்யும் சேர்ந்து நடித்த “கில்லி” திரைப்படத்தை நம்மால் மறக்க முடியாது. இன்றும் அத்திரைப்படத்தை ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு. அதில் பிரகாஷ் ராஜ் அடிக்கடி பயன்படுத்தும் “ஹாய் செல்லம்” என்ற வசனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான வசனம் ஆகும்.
“கில்லி” திரைப்படம் வெளிவந்த போது “ஹாய் செல்லம்” என்ற வசனத்தை தன்னுடைய வாழ்நாளில் பயன்படுத்தாத ரசிகர்களே யாரும் இருந்திருக்க மாட்டார்கள். அத்திரைப்படத்தில் விஜய்க்கும் பிரகாஷ் ராஜ்ஜிற்கும் வெறித்தனமான காம்போ பலே ஆக ஒர்க் அவுட் ஆகிருக்கும்.
“கில்லி” திரைப்படத்தை தொடர்ந்து “சிவகாசி”, “ஆதி”, “போக்கிரி”, “வில்லு” போன்ற திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து “தளபதி 66” திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார்.
“தளபதி 66” திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத் குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, யோகி பாபு, ஷ்யாம், ஜெயசுதா, சங்கீதா, ஸ்ரீகாந்த் என பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
Hai Chellam sssss. We are back #thalapathy66 pic.twitter.com/K2mK2TlNgi
— Prakash Raj (@prakashraaj) May 22, 2022