CINEMA
அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு?
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் டீசர் குறித்தான புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
மணி ரத்னம் இயக்கி உள்ள வரலாற்று புனைவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது.
ஆதலால் வெகு மும்முரமாக இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. “பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்குவதற்கு எம் ஜி ஆர் முதல் பல ஜாம்பவான்கள் முயற்சி செய்தும் முடியவில்லை. ஆதலால் இத்திரைப்படத்தை தமிழ் திரையுலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்தது. அதனை தொடர்ந்து கார்த்தி ஏற்று நடித்த வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளிவந்தது. மேலும் நேற்று ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த அழகு பதுமையான நந்தினி கதாப்பாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்து வைரல் ஆனது.
சில நேரத்திற்கு முன் த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாப்பாத்திரத்தின் போஸ்டரும் வெளிவந்தது. இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டீசர் குறித்தான ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.
அதாவது நாளை மாலை 6 மணிக்கு “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டீசர் வெளிவரும் என செய்திகள் தெரிவிக்கின்றன. பல நாட்களாக “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்த எந்த அப்டேட்டுகளும் வெளிவரவில்லை என்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். அவர்களை குஷிப்படுத்தும் விதமாக கடந்த சில நாட்களாக திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களின் போஸ்டர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த “பொன்னியின் செல்வன்” டீசர் நாளை வெளிவர உள்ளதால் ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேத்திக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.