Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வந்துவிட்டான் பொன்னியின் செல்வன்… வெறித்தனமான டீசர் வெளியிடூ

CINEMA

வந்துவிட்டான் பொன்னியின் செல்வன்… வெறித்தனமான டீசர் வெளியிடூ

அனைவரும் ஆவலோடு எதிபார்த்துக் காத்திருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் வெளிவந்துள்ளது

மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தை குறித்தான அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகிய பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெகு நாட்களாக “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்தான எந்த அப்டேட்டுகளும் வெளிவராததால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். தற்போது அவர்களை குஷிப்படுத்தும் வகையில் தினமும் ஒரு அப்டேட் வெளிவந்து கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் சீயான் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளிவந்தது. அதனை தொடர்ந்து கார்த்தி ஏற்று நடித்த வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளிவந்து வைரல் ஆனது. வந்தியதேவன் கதாப்பாத்திரம் தான் நாவலின் கதாநாயகன். நாவல் முழுக்க பயணிக்கும் கதாப்பாத்திரமும் அவர் தான்.

அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த நந்தினி கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளிவந்து கிளுகிளுப்பு ஊட்டியது. நேற்று த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாப்பாத்திரத்தின் மினுமினுக்கும் போஸ்டர் வெளிவந்து வைரல் ஆனது.

இந்நிலையில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தின் டீசர் தற்பொது வெளிவந்துள்ளது. டீசர் அட்டகாசமாக அமைந்துள்ளது. நடிகர்கள் அனைவரும் கச்சிதமாக அவரவர் கதாப்பாத்திரங்களில் பொருந்தியிருக்கின்றனர்.

முதல் பாகத்தில் சீயான் விக்ரம் தான் முன்னணி கதாநாயகராக இருப்பார் என எதிர்பாரக்கப்படுகிறது. டீசரை பார்க்கும் போதும் விக்ரமின் Screen presence –ஏ அதிகமாக உள்ளது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

                   

Continue Reading

More in CINEMA

To Top