Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“முப்பாட்டன் சோழன் என்பதில் பெருமைக் கொள்வோம்…” பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ

CINEMA

“முப்பாட்டன் சோழன் என்பதில் பெருமைக் கொள்வோம்…” பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ

“பொன்னியின் செல்வன்” படக்குழு சோழர் வரலாறு குறித்து வெளியிட்ட சிறப்பு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் எழுதப்பட்ட முக்கிய வரலாற்று நாவல்களில் மிகவும் போற்றப்படும் நாவல் “பொன்னியின் செல்வன்”. இந்த நாவலை எழுதியவர் கல்கி. இந்த நாவல் 1950 ஆம் ஆண்டில் இருந்து 1954 ஆம் ஆண்டு வரை “கல்கி” என்ற வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

சோழர் வரலாற்றில் ராஜ ராஜ சோழனின் அண்ணனான ஆதித்ய கரிகாலனின் கொலையை கையமாக வைத்து இந்நாவல் புனையப்பட்டுள்ளது. இந்த நாவல் வெளிவந்து இத்தனை வருடங்கள் ஆகியும் தமிழ் வாசகர்களின் முன்னணி வரலாற்று நாவலாக திகழ்ந்து வருகிறது.

இந்த நாவலை திரைப்படமாக எடுக்க எம் ஜி ஆரில் இருந்து பல ஜாம்பவான்கள் முயன்றனர். ஆனால் எல்லாம் கைமீறிப்போனது. இந்நிலையில் மணி ரத்னம் மூலம் “பொன்னியின் செல்வன்” திரைப்படமாக வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படம் பேன் இந்திய திரைப்படமாக வெளிவருவதால் சோழர்கள் குறித்த விவாதம் தற்போது இந்திய அளவில் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது “பொன்னியின் செல்வன்” படக்குழு ஒரு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பல வரலாற்று அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் சோழர் வரலாற்றின் பெருமைகள் குறித்து பேசுகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

               

“பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தில் சீயான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர்.

இதில் சீயான் விக்ரம் ஆதித்ய கரிகாலன் கதாப்பாத்திரத்தில் வருகிறார். த்ரிஷா இளவரசி குந்தவையாகவும் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும் கார்த்தி வந்திய தேவனாகவும் வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top