Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பிண்ணனி பாடகர் கே கே திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

CINEMA

பிண்ணனி பாடகர் கே கே திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

பிண்ணனி பாடகர் கே கே கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும் போது உடல் நிலை சரியில்லாமல் போனது.

பிண்ணனி பாடகர் கே கே என்ற கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று கொல்கத்தாவின் ஒரு கல்லூரி அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதன் பின் மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்லும் வழியில் துர்திஷ்டவசமாக உயிரிழந்தார்.

மேடையில் பாடிக்கொண்டிருந்தபோது நெஞ்சு வலி வந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரங்கத்தில் கூட்டம் அதிகமானதாகவும் அங்கே குளிரூட்டும் சாதனம் சரியாக வேலை செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆதலால் கே கே மரணத்தை இயற்கை மரணம் என தற்போது வரை பதிவு செய்யவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. இவருக்கு வயது 53.

இந்திய சினிமாவின் மிக பிரபலமான பாடகர் கே கே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி என பல மொழி திரைப்பட பாடல்களில் பிண்ணனி பாடியுள்ளார்.

குறிப்பாக தமிழில் சொல்ல வேண்டுமானால் “மன்மதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “காதல் வளர்த்தேன்” பாடல், அந்நியன் திரைப்படத்தின் “ரண்டக்கா ரண்டக்கா”, அய்யா திரைப்படத்தின் “ஒரு வார்த்த கேக்க ஒரு வருஷம்”, “தாமிரபரணி” திரைப்படத்தின் “வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு”, “7ஜி ரெயின்போ காலணி” திரைப்படத்தின் “நினைத்து நினைத்து பார்த்தேன்”, “காக்க காக்க” திரைப்படத்தின் “உயிரின் உயிரே”, “12 B” திரைப்படத்தின் “லவ் பண்ணு”, “செல்லமே” திரைப்படத்தின் “காதலிக்கும் ஆசையில்லை”, “கில்லி” திரைப்படத்தின் “அப்படி போடு” ஆகிய பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

பிண்ணனி பாடகர் கே கே மரணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடியும் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top