CINEMA
“ஆடையில்லாத காட்சிகளை நான் எடுக்கவே இல்லை”.. தெளிவுபடுத்திய மிஷ்கின்
ஆண்ட்ரியா ஆடையில்லாமல் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அப்படிப்பட்ட காட்சிகள் எடுக்கப்படவில்லை என மிஷ்கின் தெளிவுபடுத்தியுள்ளாராம். ஆனால்…
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பிசாசு 2”. இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். மிஷ்கின் இயக்கிய “பிசாசு” திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களமாக அமைந்த பேய் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. இதனை தொடர்ந்து “பிசாசு 2” திரைப்படமும் வித்தியாசமான பேய் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பிசாசு 2” திரைப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் பூர்ணா, அஜ்மல், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சென்சார் போர்டு “A” சர்ட்டிஃபிகேட் வழங்கியதாம். ஆதலால் இத்திரைப்படத்தை அனைத்து வயதினரும் பார்க்கும் வகையில் சில காட்சிகளை கத்தரித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே “பிசாசு 2” திரைப்படத்தில் ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் மிஷ்கின் இதனை மறுத்துள்ளார். அதாவது சமீபத்திய பேட்டியில் இது குறித்து பேசிய மிஷ்கின் “பிசாசு 2 திரைப்படத்தில் ஆடையில்லாத காட்சிகளை படமாக்கவில்லை. புகைப்படங்களே எடுக்கப்பட்டது. ஆண்ட்ரியாவுக்கும் எனக்கு பொதுவான ஒரு நண்பரை வைத்து அந்த புகைப்படங்களை எடுத்தோம். நான் கூட அந்த படங்களை பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் ஃபோடோஷூட் தான் நடைபெற்றிருந்ததாகவும் காட்சிகள் படமாக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
