CINEMA
ரோலக்ஸ் கெட் அப்க்கு இவங்க தான் காரணம்? சூர்யா வெளியிட்ட சர்ப்ரைஸ்
ரோலக்ஸ் தோற்றத்தின் வெறித்தனமான லுக்கிற்கு காரணமானவர் இவர் தான் என சூர்யா வெளிப்படையாக சர்ப்ரைஸை உடைத்துள்ளார்.
“விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா கேமியோ ரோலில் செய்த ரோலக்ஸ் கதாப்பாத்திரம் வேற லெவல் மாஸான கதாப்பாத்திரமாக அமைந்தது. சூர்யாவின் வில்லத்தனமான கெட் அப்பும் கொலை வெறியான லுக்கும் ரசிகர்களை “ஓ” போட வைத்தது.
இந்நிலையில் இந்த கெட் அப் போட்ட மேக் அப் ஆர்ட்டிஸ்ட் யார் என்பதை சூர்யாவே வெளிப்படுத்தியுள்ளார். செரினா என்பவர் தான் சூர்யாவிற்கு ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தின் முக வடிவமைப்பு செய்த மேக் அப் ஆர்டிஸ்ட். அவரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் சூர்யாவே வெளியிட்டுள்ளார். அப்புகைபடம் இதோ..
View this post on Instagram
சூர்யா “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்கு கமல் ஹாசன் அன்பு பரிசாக சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை அளித்திருந்தார். மேலும் “ரோலக்ஸ்’ கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக சூர்யா சம்பளம் வாங்கவில்லை என சமீபத்தில் கமல் ஹாசன் பேசிய விடியோ மூலம் தெரிய வந்தது.
“விக்ரம்” திரைப்படம் தற்போது உலகளவில் ரூ. 300 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. கமல் ஹாசனின் சினிமா கேரியரிலேயே “விக்ரம்” திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது.
சென்னையில் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சில திரையரங்குகளில் “விக்ரம்” திரைப்படம் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கிறது. வெகு காலம் கழித்து கமல் ஹாசன் திரைப்படம் மாஸ் ஹிட் ஆகி உள்ளதால் கமல் ஹாசனும் படக்குழுவினரும் குஷியில் உள்ளனர். “விக்ரம்” திரைப்படம் வெளியாவதற்கு முன் கமல் ஹாசன் உலகமெங்கும் செய்த புரோமோஷன் வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்றே கூறலாம்.
